
Table of Contents
This article is available in the following languages:
வணக்கம் சமூகமே! ஏப்ரல் மாதத்தில் WazirX இல் என்ன நடந்தது என்பதைப் பற்றிய மாதாந்திர அறிக்கை இதோ.
சென்ற மாதம் என்ன நடந்தது?
[முடிந்தது] 17 புதிய மார்க்கெட் ஜோடிகள்: சென்ற மாதம் நாங்கள் USDT மார்க்கெட்டில் 13 டோக்கன்களும் INR மார்க்கெட்டில் 4 டோக்கன்களும் சேர்த்துள்ளோம்! இப்பொழுது நீங்கள் WazirX இல் APE, OXT, OXT, WOO, KDA, MULTI, IDEX, ACA, JOE, MC, NAS, ALCX, HIGH, RNDR, PLA, FOR, GMT, மற்றும் BNX ஐ வாங்கலாம், விற்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். உங்கள் விருப்பமான ஜோடிகளை இங்கே வர்த்தகம் செய்யத் துவங்குங்கள்!
[முடிந்தது] செயலியில் விலை நினைவூட்டல் அம்சம்: இருப்பதிலேயே சிறந்த அனுபவத்தை எங்கள் அனைத்து தளங்களிலும் பயனர்களுக்கு வழங்குவதற்காக WazirX இல் நாங்கள் எப்பொழுதும் பணிபுரிகிறோம். எனவே, பயனர்களின் தேவை மற்றும் விருப்பங்களை மனதில் கொண்டு, இப்பொழுது முதல், தங்களுக்குப் பிடித்த காயின்கள்/டோக்கன்களுக்கு “விலை நினைவூட்டல்களை” WazirX செயலிலேயே பயனர்கள் செயல்படுத்தலாம்! இதைப் பற்றி இங்கே மேலும் அறியுங்கள்.
நாங்கள் எதைக் கட்டமைக்கிறோம்?
[நடந்துக்கொண்டிருக்கிறது] AMM புரோட்டோகால்: நமது DEX சார்ந்திருக்கும் சில புரோட்டோகால்களில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. நாம் நேரலைக்குச் செல்வதை இது தடுக்கிறது. இந்த நேரத்தில், இது எவ்வளவு காலம் எடுக்கும் என்பதற்கு எங்களிடம் ETA இல்லை. செயல்முறையை விரைவுபடுத்த நாங்கள் புரோட்டோகால் குழுவுடன் இனைந்து கடுமையாக உழைக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
[நடந்துக்கொண்டிருக்கிறது] புதிய டோக்கன்கள்: வரும் வாரங்களில் WazirX இல் மேலும் டோக்கன்களை பட்டியலிடவிருக்கிறோம். ஏதாவது பரிந்துரைகள் சொல்ல விருப்பமா? எங்களுக்கு @WazirXIndia இல் ட்வீட் செய்யுங்கள்.
சில சிறப்பம்சங்கள்
- WazirX, பிட்லர்ஸ் சமூகம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் ஆகியவை இணைந்து கோவாவில் வெப்3 ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு பிளாக்செயின் பார்க் நிறுவவிருக்கிறது. மேலும் அறிய இங்கே செல்லவும்.
- ஸீ பிசினஸுடன் ஒரு எதிர்கால நோக்கம் கொண்ட கூட்டுறவிற்குள் நுழைந்திருக்கிறோம், மேலும் நீண்ட கால லாபமிக்க ஒரு உறவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த மாதம் எங்களுக்கு ஆக்கபூர்வமான மாதமாக இருந்தது, நிறைய நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் மே 2022 ஐ எதிர்பார்க்கிறோம். எப்பொழுதும் போல எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளியுங்கள்.
ஜெய்ஹிந்த்!
