மாதாந்திர மதிப்பாய்வு – ஜனவரி 2022 (Month in Review – January 2022)

By பிப்ரவரி 1, 2022பிப்ரவரி 16th, 20222 minute read

வணக்கம் சமூகத்தாரே! ஜனவரியில் WazirX இல் என்ன நடந்தது என்பது குறித்த ஒரு மாதாந்திர அறிக்கை இது.

கடந்த மாதம் என்ன நடந்தது?

[முடிக்கப்பட்டது] 20 புதிய மார்க்கெட் ஜோடிகள்: எங்கள் USDT சந்தையில் 8 டோக்கன்களையும், INR சந்தையில் 12 டோக்கன்களையும் கடந்த மாதம் சேர்த்துள்ளோம்! நீங்கள் இப்போது WazirX இல் COCOS, AMP, CTXC, VOXEL, ONE, NEAR, ENS, POWR, ROSE, ANT, ARDR, GRT, OOKI, CREAM, BTTC, GLMR, ANY, மற்றும் XNO ஆகியவற்றை வாங்கலாம், விற்கலாம், மற்றும் வர்த்தகம் செய்யலாம். உங்களுக்குப் பிடித்த ஜோடிகளை இங்கு வர்த்தகம் செய்யத் தொடங்குங்கள் 

[முடிக்கப்பட்டது] மாபெரும் EZ பரிசுகள்: ஜனவரி 4 முதல் ஜனவரி 14 2022 வரை பல செயல்பாடுகள் மற்றும் அற்புதமான பரிசுகளை வழங்குவதற்காக WazirX உம் EasyFi உம் கூட்டுச் சேர்ந்தன. $47,100 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது. மேலும் விவரங்கள் இங்கே

[முடிக்கப்பட்டது] மாபெரும் புஷ் பரிசு: ஜனவரி 27 முதல் பிப்ரவரி 03 2022 வரை பல செயல்பாடுகள் மற்றும் அற்புதமான பரிசுகளை வழங்குவதற்காக WazirX உம் Ethereum புஷ் நோட்டிஃபிகேஷன் சர்வீஸ் (EPNS) உம் கூட்டுச் சேர்ந்தன. $25,500 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் தகவல்கள் இங்கே.

[முடிக்கப்பட்டது] UFT வரவேற்பு சலுகை: 2022 ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை குடியரசு தின பிரசாரத்தில் WazirX உம் UniLend உம் இணைந்து செயல்பட்டன. கிரிப்டோவர்ஸில் நுழைவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் நிதி சுதந்திரத்தைக் கண்டறிய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். $20,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் தகவல்கள் இங்கே.
[முடிக்கப்பட்டது] குருகுல் காங்ரியுடன் இலவச இரு மொழி பிளாக்செயின் படிப்பு: இது மாணவர்களுக்கான கல்வி முன்னெடுப்பாகும், இது குருகுல் காங்ரி (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) WazirX கூட்டமைப்பில் இலவசமாகக் கிடைக்கிறது. பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் மாணவர்கள், WazirX இன் இணை நிறுவனர் சித்தார்த் மேனனிடம் இருந்து இலவசமாக அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் இங்கே.

நாங்கள் எதைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம்?

[நடந்து கொண்டிருக்கிறது] AMM புரோட்டோகால்: எங்கள் DEX சார்ந்து இருக்கும் சில புரோட்டோகால்களில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இது நாங்கள் நேரலையில் செல்வதைத் தடுக்கிறது. இந்த நேரத்தில், இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எங்களிடம் ETA இல்லை. செயல்முறையை விரைவுபடுத்த புரோட்டோகால் குழுவுடன் இணைந்து நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருறோம் என்ற உறுதிப்பாட்டைப் பெறுங்கள். 

[நடந்து கொண்டிருக்கிறது] புதிய டோக்கன்கள்: வரும் வாரங்களில் WazirX இல் மேலும் பல டோக்கன்களைப் பட்டியலிட இருக்கிறோம். ஏதேனும் யோசனைகள் உள்ளனவா? @WazirXIndia க்கு ட்வீட் செய்யவும்.

சில முக்கிய அம்சங்கள்

  • இந்த மாதம் #HumansOfCrypto சீசன் 2 இன் இரண்டு எபிசோட்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
    • எபிசோட் 1 👇                      
    • எபிசோட் 2 👇
  • கிரிப்டோ ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்தமான கிரிப்டோ வலைப்பதிவை இப்போது கன்னடத்தில் படிக்கலாம்! 
  • ஜனவரி 24, 2022 முதல், INR சந்தைகளில் கட்டணம் செலுத்தும் போது WRX இனி பயன்படுத்தப்படாது. மாறாக, எக்ஸ்சேஞ்ஜில் உங்கள் WRX இருப்பைப் பொறுத்து உங்கள் வர்த்தகக் கட்டணங்களைக் குறைக்க இது உதவும். நீங்கள் இன்னமும் USDT, BTC மற்றும் WRX சந்தைகளில் WRX மூலம் வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்றாலும், INR சந்தையில், நீங்கள் INR மூலம் மட்டுமே வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்த முடியும். கூடுதல் தகவல்கள் இங்கே.

இது எங்களுக்கு நிகழ்வுகள் நிறைந்த ஒரு மாதமாகும், 2022 பிப்ரவரியை நாங்கள் அதிக நம்பிக்கையுடனும் ஆக்கபூர்வமாகவும் எதிர்நோக்குகிறோம். நீங்கள் எப்பொழுதும் ஆதரிப்பது போல் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.

ஜெய்ஹிந்த்! 🇮🇳

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply