Table of Contents
சோர்ஸ், வெப்-ஸ்கேல் பிளாக்செயின் ப்ரோட்டோகோல் ஆகும், இது டெவலப்பர்கள் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் மார்கெட்பிளேஸ்களை உருவாக்க உதவுகிறது. சொலானாவின் வேகமான, பாதுகாப்பான மற்றும் தணிக்கை-எதிர்ப்பு கட்டமைப்பு காரணமாக அது வெகுஜன பயன்பாட்டுக்குச் சிறந்த தளமாக அமைகிறது. கிரிப்டோ சந்தை இதை உணர்ந்ததாகத் தெரிகிறது – அதன் டோக்கன் – SOL – ஜூலை மாதத்தில் குறைவான $23-லிருந்து செப்டம்பர் தொடக்கத்தில் $195-ஆக உயர்ந்தது. இது, 2 மாதங்களுக்குள், 8 மடங்குக்கும் அதிக வருமானம்!
ஏன் இந்த பரபரப்பு? ஏன் சொலானா சூரியனை நோக்கிச் செல்கிறது?
சொலானா: டீப் டைவ்
சொலானா என்பது ஒரு விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க் ஆகும், இது மேம்பட்ட கணக்கீட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, அதன் பயனர்கள் ஆயிரக்கணக்கான நோடுகளில் தடையின்றி பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கின்றது. அதன் வலுவான நெட்வொர்க் செயல்திறன் உலகளாவிய வேகமான பிளாக்செயினாக அமைகிறது, இது வினாடிக்கு 50,000 பரிவர்த்தனைகளைக் கையாளும் என்று சொல்லப்படுகிறது. செயல்திறனை மேம்படுத்துவதற்காக சொலானா புரூஃப் ஆஃப் ஸ்டேக் (PoS) மற்றும் புரூஃப் ஆஃப் ஹிஸ்டரி (PoH) என்ற ஒருமித்த பொறிமுறையைப் பயன்படுத்துகிறது
இப்போது வரை, விநியோகிக்கப்பட்ட லெட்ஜரில் ஒருமித்த கருத்தை அடைவதற்கான உண்மையான வழிமுறை ப்ரூஃப் ஆஃப் வொர்க் (PoW) ஆகும், இதில் மைனர்கள் தங்கள் கணக்கீட்டு சக்தியைப் பயன்படுத்தி ஒரு கிரிப்டோகிராபிக் சிக்கலைத் தீர்க்க ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முதல் மைனர் அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியைப் பெறுகிறார்.
இந்த செயல்முறைக்கு அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் அதிக கணக்கீட்டு சக்தி தேவை என்பதால், புரூஃப் ஆஃப் ஸ்டேக் (PoS) என்ற புதிய, திறமையான முறை தோன்றியது. இந்த ஒருமித்த மாடலில், ஒரு நபர் ஒரு பங்கின் எவ்வளவு பெரிய பகுதியை வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து ஒரு புதிய பிளாக்கை சரிபார்க்கும் வாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது. இங்கே, ஒரு மைனர் தனது டோக்கனை பிணையமாக வைக்கிறார். அதற்கு ஈடாக, அவர் தனது பங்கின் விகிதத்தில் டோக்கன் பெறுகிறார்.
2017 ஆம் ஆண்டில், அனடோலி யாகோவென்கோ சொலானாவில் ஒரு வைட் பேப்பரை வெளியிட்டார், இது ஒரு புதிய நேரக் கட்டுப்பாட்டு முறையை விவரித்தது, இது பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்குகள் தானாகவே பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கும். இரண்டு நிகழ்வுகளுக்கு இடையேயான காலப்பகுதியை கிரிப்டோகிராஃபிகலாக சரிபார்க்க இந்த புதிய முறை புரூஃப் ஆஃப் ஹிஸ்டரி (PoH) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய முறையை முதலில் விவரித்தது வைட் பேப்பர்.
சொலானா டவர் BFT அல்காரிதத்தையும் செயல்படுத்தியது, இது PoH மூலம் நெட்வொர்க் முழுவதும் உலகளாவிய நேர ஆதாரத்தை அமல்படுத்துகிறது, இது பிளாக்செயினில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் நிரந்தர பொதுவான பதிவை உருவாக்குகிறது. சொலானாவின் டவர் BFT (பைஸாண்டின் ஃபால்ட் டாலரன்ஸ்) அல்காரிதம் கீழ் வரும் சிக்கல்களையும் தீர்க்கின்றது
- சில ஃபோர்க்குகள் கிளஸ்டரின் பெரும்பான்மையால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம், மேலும் வாக்காளர்கள் அத்தகைய ஃபோர்க்குகளில் வாக்களிப்பதில் இருந்து மீள வேண்டும்.
- பல ஃபோர்க்குகள் வெவ்வேறு வாக்காளர்களால் வாக்களிக்கப்படலாம், மேலும் ஒவ்வொரு வாக்காளரும் வேறுபட்ட தொகுப்புடைய ஃபோர்க்குகளைக் காணலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோர்க் இறுதியில் கிளஸ்டருக்காக ஒன்றிணைய வேண்டும்.
- வெகுமதி அடிப்படையிலான வாக்குகள் ஒரு அபாயத்தைக் கொண்டுள்ளன. வாக்காளர்களுக்கு எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதை கான்ஃபிகர் செய்யும் திறன் இருக்க வேண்டும்.
- திரும்பப் பெறுவதற்கான செலவு கணக்கிடப்பட வேண்டும். சில அளவிடக்கூடிய நிலைத்தன்மையை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
- ASIC வேகம் நோடுகளுக்கு இடையில் வேறுபடுகிறது, மேலும் தாக்குதல் நடத்துபவர்கள் புரூஃப் ஆஃப் ஹிஸ்டரி ASIC-களைப் பயன்படுத்தலாம், அவை மற்ற கிளஸ்டர்களை விட மிக வேகமாக இருக்கும். புரூஃப் ஆஃப் ஹிஸ்டரி ASIC வேகத்தில் உள்ள மாறுபாட்டைப் பயன்படுத்தும் தாக்குதல்களை, ஒருமித்து தடுக்க வேண்டும்.
சொலானா லேப்ஸ் முதலில் ஒரு பிரபல மல்டிசெயின் இன்டர்ஆபரேபிலிட்டி தளமான லூம் நெட்வொர்க்கின் , ஸ்பின்ஆஃபாக நிறுவப்பட்டது. அதன் முந்தைய பெயருடன் குழப்பமடையாமல் இருப்பதற்காக, 2019-ல் சொலானா லேப்ஸ் என்று மறுபெயரிடப்பட்டது. நிறுவனத்தின் பீட்டா மெயின்நெட் மார்ச் 2020-ல் தொடங்கப்பட்டது.
சொலானா ஏன் அணிவகுக்கிறது?
நீங்கள் கூர்ந்து கவனித்தால் அது தெளிவாகத் தெரியும். சொலானா பேக்குகள் செய்யும் புதுமைகள் ஒரு முதலீட்டாளரின் மகிழ்ச்சியாகும்:
விரைவான வேகத்தில் பரிவர்த்தனைகளை பதிவு செய்ய PoH மற்றும் டவர் BFT-ஐ பயன்படுத்தும் முதல் வெப்-ஸ்கேல் பிளாக்செயின் சொலானா ஆகும். தற்போது பிட்காயின் வினாடிக்கு 5 முதல் 7 பரிவர்த்தனைகளைக் கையாளுகிறது (TPS), மற்றும் எத்தீரியம் 25 TPS ஐக் கையாளுகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில், சொலானா 50K TPS மதிப்பைக் கொண்டுள்ளது, இது எத்தீரியத்துக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. சொலானாவின் சராசரி பிளாக் நேரம் 600 மில்லி விநாடிகள் – இது பிளாக்செயினில் ஒரு புதிய பிளாக்கை உருவாக்க எடுக்கும் நேரமாகும்.
சொலானா அதன் உயர் செயல்திறன் ப்ரோட்டோகாலுடன் ஸ்கேலாபிலிட்டி மற்றும் வேகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, புரட்சிகரமான நேரப்பதிவு கட்டமைப்பு பிற பிளாக்செயின்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் திறமையான ஒருமித்த மாதிரியைச் செயல்படுத்துகின்றது. இது சொலானாவை உலகின் மிக விரைவான லேயர்-1 நெட்வொர்க்காக மாற்றுகிறது. பரவலாக்கல் நெட்வொர்க்குகளின் மூன்று பண்புகளான – பரவலாக்கம், பாதுகாப்பு மற்றும் ஸ்கேலாபிலிட்டி ஆகியவற்றுக்குத் தகுதி பெறுவதன் மூலம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரைலெம்மாவைத் தீர்ப்பதே சொலானாவின் இறுதி இலக்காகும். சொலானாவின் எட்டு முக்கிய புதுமைகள் இதை சாதித்துக் காட்டுகிறது
அதை தனித்துவமாக்கும் எட்டு முக்கிய கண்டுபிடிப்புகள் கீழே உள்ளன.
- புரூஃப் ஆஃப் ஹிஸ்டரி (PoH)
PoH என்பது ஒருமித்த செயல்முறை அல்ல; அதற்கு பதிலாக, இது ஒரு கிரிப்டோகிராஃபிக் கடிகாரம் ஆகும், இது நோடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாமல், கால நேரத்தை ஏற்றுக்கொள்ள உதவுகிறது ஒவ்வொரு நோடுக்கும் அதற்கென்று சொந்த கிரிப்டோகிராஃபிக் கடிகாரம் இருப்பதனால் இது சாத்தியமாகிறது.
- டவர் BFT
சொலானாவின் டவர் BFT என்பது ஒரு மேம்பட்ட நடைமுறை பைசண்டைன் ஃபால்ட் டாலரன்ஸ் (pBFT) வழிமுறையாகும், இது PoH என்பதுடன் தடையின்றி செயல்படுகிறது. நோடுகளிடையே பல செய்திகளைச் கடக்காமல் ஒருமித்த கருத்தை அடைய கிரிப்டோகிராஃபிக் கடிகாரத்தைப் பயன்படுத்தி அதன் வேகத்தை அடைகிறது.
- டர்பைன்
இது ஒரு பிளாக் பிராபகேஷன் நெறிமுறையாகும், இது தரவை சிறிய துண்டுகளாக உடைத்து நோடுகளுக்கு எளிதாக்குகிறது. இது, செயலாக்க சக்தி மற்றும் நெட்வொர்க்குகளின் ஒட்டுமொத்த பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கிறது.
- கல்ஃப் ஸ்ட்ரீம்
கல்ஃப் ஸ்ட்ரீம் என்பது ஒரு மெம்பூல்- அற்ற பரிவர்த்தனை பகிர்தல் ப்ரோட்டோகோலாகும், இது சொலானா 50,000 TPS-ஐ அடைய உதவுகிறது. இது நெட்வொர்க் வேலிடேட்டர்களை முன்கூட்டியே பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது, இதனால் வேகம் அதிகரிக்கும்.
- சீலெவல்
சீலெவெல் என்பது ஒரு இணைப் பரிவர்த்தனை செயலாக்க என்ஜினாகும், இது ஒரே செயினில் ஒரே நேரத்தில் தரவை செயலாக்குகிறது. இது GPU-கள் மற்றும் SSD-களில் கிடைமட்டமாக ஸ்கேல் செய்வதற்காக சொலானாவை செயலாக்குகிறது.
- பைப்லைனிங்
செயலாக்கத்திற்காக வெவ்வேறு வன்பொருளுக்கு உள்ளீட்டு தரவின் ஸ்ட்ரீமை ஒதுக்கும் செயல்முறை பைப்லைனிங் என்று அழைக்கப்படுகிறது. சரிபார்ப்பு தேர்வுமுறைக்கு இது ஒரு பரிவர்த்தனை செயலாக்க அலகு போல் செயல்படுகிறது.
- கிளவுட்பிரேக்
கணக்குகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் நினைவகம் விரைவாக அளவிடுதல் மற்றும் அணுகல் வேகம் ஆகியவற்றினால் அது ஒரு தடங்கலாகிறது. கிளவுட் பிரேக் என்பது SSD-களின் கான்ஃபிகரேஷன் முழுவதும் பரவலான ஒரே நேரத்தில் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உகந்த கட்டமைப்பாகும், இது ஸ்கேலாபிலிட்டி மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
- ஆர்க்கைவர்ஸ்
பிளாக்செயின் நெட்வொர்க்கில் தரவைச் சேமிப்பது விரைவில் முதன்மை மையப்படுத்தல் வெக்டாராக மாறும். இது பரவல் மயமாக்கலின் முதல் யோசனையை உடைக்கிறது; எனவே தரவு சேமிப்பு சொலானாவின் வேலிடேட்டர்களால் ஆர்க்கைவர்ஸ் எனப்படும் நோடுகளின் நெட்வொர்க்கிற்கு ஏற்றப்படுகிறது
சொலானாவின் அசல் டோக்கன்– SOL
பெரும்பாலான ஸ்மார்ட் டோக்கன் தளங்களைப் போலவே, சொலானா அனைத்து ஆன்-செயின் பரிவர்த்தனைகளுக்கும் பணம் செலுத்த SOL-ஐ அதன் கேஸ் டோக்கனாகப் பயன்படுத்துகிறது. செப்டம்பர் 2021 நிலவரப்படி, SOL, எத்தீரியத்துக்கான நீண்டகால போட்டியாளராகக் கருதப்பட்டு, அது மிகவும் மதிப்புமிக்க பத்து கிரிப்டோகரன்ஸிகளின் நிலைகளில் ஏழாவது இடத்தில் உள்ளது, எத்தீரியம் கூட புரூஃப் ஆஃப் ஸ்டேக் மாடலுக்கு மாற்றப்பட்டு எத்தீரியம் 2.0 என மாறுகின்றது, அத்தகைய தொழில்நுட்பங்களில் சந்தையின் ஆர்வம் அதிகரித்து வருவது புரிந்துகொள்ளத்தக்கது, மேலும் இந்த வேக மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி, அந்த முன்னிலையில் சொலானா ஏற்கனவே இருக்க உதவுகிறது. அது சூரியனுக்குப் பறக்கும் SOL-ஐ அனுப்புகிறது!
பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.