Skip to main content

பயனர்களுக்கான பிரத்தியேக தொலைபேசி ஆதரவை WazirX அறிமுகப்படுத்துகிறது (WazirX Introduces Dedicated Phone Support For Users)

By நவம்பர் 2, 2021நவம்பர் 29th, 20212 minute read

வணக்கம் மக்களே! சரியான நேரத்தில் வாடிக்கையாளர் ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், குறிப்பாக அது உங்கள் பணம் சம்பந்தப்பட்டதாக இருந்தால். இந்தச் சந்தர்ப்பத்தில், உங்களுக்காக பிரத்யேக தொலைபேசி ஆதரவை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! ஆம், உங்கள் விசாரணைகளை விரைவாகத் தீர்க்க எங்கள் ஆதரவுக் குழுவை நீங்கள் நேரடியாக அழைக்கலாம்.

பயனர்களுக்கு பிரத்யேக தொலைபேசி ஆதரவை அறிமுகப்படுத்திய முதல் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ஜ் WazirX தான்.

WazirX தொலைபேசி ஆதரவை தொடர்பு கொள்வது எப்படி?

உண்மையில் அது மிகவும் எளிதானது. எங்களை நீங்கள் 0124-6124101 / 0124-4189201 என்ற எண்ணிலோ அல்லது எங்கள் டோல் ஃப்ரீ எண்ணான 1800-309-4449 என்ற எண்ணிலோ அழைக்கலாம்.

எங்கள் பிரத்தியேக தொலைபேசி ஆதரவு குழு ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது (ஆம், வார இறுதி நாட்களிலும் கூட!) இந்திய நேரம் காலை 9 முதல் – மாலை 6 PM வரை! ஏதேனும் விசாரணைகள், தயாரிப்பு சிக்கல்கள் அல்லது ஏற்கனவே உள்ள உங்களின் புகார் டிக்கெட் தீர்வை விரைவுபடுத்த, எங்கள் ஆதரவுக் குழுவை நீங்கள் அழைக்கலாம்.

எங்கள் ஆதரவு குழு திங்கள் முதல் ஞாயிறு வரை இந்திய நேரம் காலை 9 முதல் – மாலை 6 வரை.

கொஞ்சம் பொறுங்கள் இன்னமும் இருக்கிறது!

கடந்த சில மாதங்களாக, எங்கள் பதிவுகள் மற்றும் அளவுகளில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்கிறோம். பிப்ரவரி 2021 முதல் எங்களுக்கு வரும் ஆதரவு கோரிக்கைகளின் சராசரி எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது. எங்கள் ஆதரவுக் குழுவினரில் 40%க்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதால், கோவிட் நிச்சயமாக விஷயங்களை எளிதாக்கவில்லை.

அதிக வாடிக்கையாளர்களைக் கையாள, நாங்கள் கற்றுக்கொள்கிறோம், மேலும் எங்கள் குழுவையும் அமைப்புகளையும் அதிகரிக்கிறோம். தொழில்நுட்ப விஷயத்தில், எங்கள் வர்த்தக இயந்திரத்தை மேம்படுத்த, ராஃப்டார் திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் குழு விஷயத்தில், சில அற்புதமான புள்ளிவிவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

  • நாங்கள் எங்கள் ஆதரவுக் குழுவை 400% அதிகரித்துள்ளோம், அவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
  • மே மாதத்தில், ஒரு பயனருக்கு முதல் பதிலை வழங்க எங்கள் குழுவிற்கு 6 நாட்கள் ஆகும். இன்று அதற்கு 14 மணி நேரமே ஆகிறது!
  • இன்று, எங்கள் ஆதரவுக் குழு பொதுவாக ஒரு ஆதரவு கோரிக்கையை 4 நாட்களுக்குள் தீர்க்கிறது. மே மாதத்தில் இதற்கான தீர்வு நேரம் 16 நாட்களாக இருந்தன.

எங்களை எப்போதும் ஆதரிப்பதற்கு நன்றி மக்களே! நாங்கள் ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக இருப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply