Skip to main content

பட்ஜெட் 2022 – கிரிப்டோ தொழிலுக்கான முக்கிய சிறப்பம்சங்கள்(Budget 2022 – Key highlights for the Crypto Industry)

By பிப்ரவரி 1, 2022பிப்ரவரி 3rd, 20222 minute read

கிரிப்டோ துறையை சட்டப்பூர்வமாக்குவதற்கான பாதையை நோக்கி இந்தியா செல்கிறது என்பதை 2022 பட்ஜெட் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கு, இந்தியா பிளாக்செயினில் இயங்கும் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவது பற்றிய செய்தி நிச்சயமாக ஒரு மாற்றத்தை உருவாக்கும் செய்தியாகும்.

கிரிப்டோ ஆர்வலர்கள் சட்டபூர்வ மற்றும் வரிவிதிப்பு விஷயங்களில் சில தெளிவுகளைப் பெற நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். இது சம்பந்தமாக, 2022 நிதி மசோதா சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.

2022 பட்ஜெட்டின் கிரிப்டோ-சம்பந்தப்பட்ட சிறப்பம்சங்கள் இதோ:

வரையறைகள்: மெய்நிகர் டிஜிட்டல் சொத்து என்ற சொல் வெளிப்படையாக வரையறுக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் டிஜிட்டல் சொத்து: எளிமையாகச் சொல்வதானால், கிரிப்டோ மற்றும் நான் ஃபன்ஜிபில் டோக்கன்கள் (NFT) இப்போது குறிப்பாக மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளாக அங்கீகரிக்கப்படலாம்!. …” இது கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகள் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ உருவாக்கப்பட்ட, பதில் மதிப்புடனோ இல்லாமலோ மாற்றிக் கொள்ளப்பட்ட மதிப்புக்கு, உள்ளார்ந்த மதிப்பு இருப்பதான வாக்குறுதி அல்லது அறிவிப்புடன் கூடிய எந்த ஒரு தகவல் அல்லது குறியீடு அல்லது எண் அல்லது டோக்கன் (இந்திய அல்லது வெளிநாட்டு நாணயம் அல்லாத), அல்லது வேறு எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அல்லது, முதலீட்டுத் திட்டம் மட்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் எந்தவொரு நிதி பரிவர்த்தனை அல்லது முதலீட்டிலும் அதன் பயன்பாடு உட்பட எதற்குமான சேமிப்பின் மதிப்பு அல்லது ஒரு கணக்கின் அலகாகச் செயல்படுகிறது; இது மின்னணு முறையில் மாற்றப்படலாம், சேமிக்கப்படலாம் அல்லது வர்த்தகம் செய்யப்படலாம்…”

  • வகைப்பாடு: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56, ‘மெய்நிகர் டிஜிட்டல் சொத்து’ என்பதைச் சேர்ப்பதற்காக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மதிப்பீட்டாளர் கிரிப்டோ அல்லது NFT போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்தை பரிசாகப் பெற்றால், அதற்கு “மற்ற ஆதாரங்களிலிருந்து வரும் வருமானம்” என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படும். பரிசுகளுடன் தொடர்புடைய 50,000 வரம்பு இதற்கும் உள்ளது.
  • வரிவிதிப்பு: பிரிவு ‘115BBH’ மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளுக்கு வரி விதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் டிஜிட்டல் சொத்தை பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில், மதிப்பீட்டுக்கு உட்படுபவர் 30% வரி செலுத்த வேண்டும். இதன் பொருள்:
  •  மெய்நிகர் டிஜிட்டல் சொத்தின் விற்பனை விலை ₹ 300 ஆகவும் அதற்கான கொள்முதல் விலை ₹200 ஆகவும் இருந்தால், செலுத்த வேண்டிய வரியின் அளவு நிகர வருமானத்தின் மேல் கணக்கிடப்படும்:

விற்பனை விலை: ₹300

(கழித்தல்)கொள்முதல் விலை: ₹200

நிகர வருமானம்: ₹100

செலுத்த வேண்டிய வரி: ₹30 (₹100×30%)

    • வருமானத்திற்கு எதிராக எந்த செலவையும் கோர முடியாது. நிகர வருமானத்தைக் கணக்கிட, கையகப்படுத்துதலுக்கான செலவு (கொள்முதல் விலை) மட்டுமே விற்பனை வருவாயிலிருந்து கழிக்கப்படும்.
    • இழப்புகளை செட்-ஆஃப் செய்வது அல்லது மற்றொரு ஆண்டிற்கு எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது.
  • மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றிக் கொடுப்பதற்கான வரி: மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவது தொடர்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், பிரிவு 194S இன் கீழ் அரசாங்கத்திற்கு 1% வரி செலுத்த வேண்டும். இங்கே, வரி செலுத்தப் பொறுப்பான நபர், பரிமாற்றத்திற்காக (வாங்குபவர்) பணம் செலுத்தும் நபராக இருப்பார். இருப்பினும் இதோ நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:
    • பிரிவு 194S இன் விதிகளை ஈர்க்க பதில்மதிப்பு இருக்க வேண்டியது (பணமாக அல்லது பொருளாக) அவசியம்.
    • மெய்நிகர் டிஜிட்டல் சொத்தை வாங்குபவர் வரித் தணிக்கைக்கு உட்படாதவர் என்றால் அல்லது வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் ஏதும் இல்லாதவர் என்றால் (எ.கா: சம்பளம் வாங்கும் நபர்கள்), பதில்மதிப்பின் மொத்த மதிப்பு நிதியாண்டில் ₹50,000 (ஐம்பதாயிரம் ரூபாய்) ஐத் தாண்டவில்லை என்றால், 1% வரி பிடித்தம் பொருந்தாது. எவ்வாறாயினும், வரித் தணிக்கை பொருந்தினால் அல்லது வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் வரிவிதிப்புக்காக அளிக்கப்பட்டால், ₹50,000 வரம்பு ₹10,000 ஆக குறைக்கப்படும்.
    • வரியை டெபாசிட் செய்வதற்கான படிவங்கள், காலக்கெடு மற்றும் நடைமுறை பற்றிய கூடுதல் விவரங்கள் வரவேண்டியிருக்கிறது.

கிரிப்டோ வரிவிதிப்பு குறித்த தெளிவு, இந்தியாவில் கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் தேவைப்படும் அங்கீகாரத்தை நிச்சயமாகச் சேர்க்கும். இந்த நிகழ்வு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளுக்கு இடையே உள்ள தெளிவின்மையை நீக்கி கிரிப்டோ தொழில்துறைக்கு நிதிச் சேவைகளை வழங்க முடியும் என நம்புகிறோம். இது ஒரு ஆரம்பம் தான் என்றாலும், நாங்கள் இன்னும் நிறைய சாதகமான விஷயங்களை எதிர்பார்க்கிறோம்.

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply