Skip to main content

WazirXஇல் KYC சரிபார்ப்பை நிறைவு செய்வது எப்படி? (How to complete KYC verification on WazirX?)

By ஏப்ரல் 27, 2022மே 19th, 20222 minute read
WazirX

அன்புள்ள நண்பர்களே!

உங்கள் கிரிப்டோ பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சி. உங்களுக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் WazirX உங்களுக்கு உதவ நிச்சயமாக இருக்கிறோம். எங்கள் வழிகாட்டிகளை படித்தப் பின்னரும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் இங்கே அழைக்கலாம். 

WazirX வழிக்காட்டுதல்கள்

KYC செயல்முறையை நிறைவு செய்தல்

WazirXஇல் உங்களுக்கான கணக்கைத் திறந்தப் பிறகு KYCஐ நிறைவு செய்வது என்பது இரண்டாவது படிநிலையாகும். இங்கே, WazirXஇல் நாங்கள் உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, எங்களுடன் சுமூகமான, பாதுகாப்பான மற்றும் நிறைவான அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறோம். இந்தச் செயல்முறையை நிறைவு செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்:

படிநிலை 1: செயல்முறையைத் தொடங்கவும்: WazirXஇல் KYC சரிபார்ப்புக்கான விருப்பத்தை எங்கே காணலாம்?

Get WazirX News First

* indicates required

மொபைல்:

  1. மேல் இடது பட்டனைக் கிளிக் செய்து பயனர் அமைப்புகளுக்குச் செல்லவும்.

2. “உங்கள் KYCஐ சரிப்பார்க்கவும்” என்ற பிரிவைக் கிளிக் செய்யவும்.

வலைத்தளம்: 

அதேபோல, அமைப்புகள் என்பவற்றில் “உங்கள் KYCஐ சரிப்பார்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 2: KYC செயல்முறை தொடக்கம்

மொபைல்:

  1. படிநிலைகளைப் படித்து, என்னென்ன ஆவணங்கள் (PAN, ஆதார்/பாஸ்போர்ட்/ஓட்டுநர் உரிமம்) தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
  2. இப்போது KYCஐ நிறைவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைத்தளம்: 

  1. கீழே காட்டப்பட்டுள்ளவாறு உங்கள் தனிநபர் தகவலை உள்ளிடவும்.
Graphical user interface, applicationDescription automatically generated

படிநிலை 3: செல்ஃபி சரிபார்ப்பு

மொபைல்:

  1. நல்ல செல்ஃபியின் பாராமீட்டர்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்த பிறகு ‘அடுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்.

செல்ஃபி எடுக்கும்போது பின்வருபவற்றை கவனத்தில் கொள்ளவும்:

  • கண்ணாடி எதுவும் அணியக் கூடாது.
  • தொப்பி எதுவும் அணியக் கூடாது.
  • முகம் தெளிவாகத் தெரிய வேண்டும்.
  • உங்கள் முகத்தில் நல்ல வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • கேமராவை நேரடியாகப் பார்க்கவும்.
  1. செல்ஃபியைக் கிளிக் செய்யவும். 
  2. செல்ஃபியை சுற்றி ஒரு “பச்சை வட்டம்” இருப்பதை உறுதி செய்யவும்.
  3. ‘அடுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைத்தளம்:

  1. உங்கள் சாதனத்தின் வெப்கேம் வழியாக செல்ஃபி எடுக்கவும்.
Graphical user interface, applicationDescription automatically generated

படிநிலை 4: PAN சரிபார்ப்பு

மொபைல்: 

  1. படமெடுக்கும் PAN உடைய பாராமீட்டர்கள் அனைத்தும் பொருந்துவதை உறுதி செய்யவும்.
  2. ‘அடுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெட்டிக்குள் PAN அட்டையின் முன்பக்கத்தைப் படமெடுக்கவும்.
  4. பெட்டிக்குள் PAN அட்டையின் பின்பக்கத்தைப் படமெடுக்கவும்.

வலைத்தளம்:

  1. ஒரு வெள்ளைத் தாளின் PAN அட்டையை வைத்து படமெடுக்கவும்.
Graphical user interface, applicationDescription automatically generated

படிநிலை 5: முகவரி சரிபார்ப்பு

மொபைல்: 

  1. முகவரிக்கான ஆதாரமாக நீங்கள் வழங்க விரும்பும் ஆவணத்தைத் தேர்வு செய்யவும்.
  2. படமெடுக்கும் பாராமீட்டர்கள் அனைத்தும் பூர்த்தியாவதை உறுதி செய்யவும்.
  3. ஆவணத்தின் முன்பக்கம் பெட்டிக்குள் இருப்பதை உறுதி செய்து, படமெடுக்கவும்.
  4. ஆவணத்தின் பின்பக்கம் பெட்டிக்குள் இருப்பதை உறுதி செய்து, படமெடுக்கவும்.

வலைத்தளம்:

  1. முகவரி சரிபார்ப்புக்கான ஆவண வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிடவும் (ஆதார் எண்/பாஸ்போர்ட் எண்/ஓட்டுனர் உரிம எண்).
  3. எண்ணை மீண்டும் உள்ளிடவும்.
  4. ஆவணத்தின் முன்பக்கத்தை படமெடுக்கவும்.
  5. ஆவணத்தின் பின்பக்கத்தை படமெடுக்கவும்.
Graphical user interface, applicationDescription automatically generated

படிநிலை 6: KYCஐ சமர்ப்பிக்கவும்:

Graphical user interface, text, applicationDescription automatically generated

படிநிலை 7: KYC சரிபார்ப்பு.

நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், அவை பரிசீலனை செய்யப்படும், மேலும் செயல்முறை நிறைவடைந்ததும் எங்களிடமிருந்து மின்னஞ்சலைப் பெறுவீர்கள். 

எங்களது குழு சில நிமிடங்களில் KYC சரிபார்ப்பை நிறைவு செய்கிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் 3 வணிக நாட்கள் வரை ஆகலாம். சரிபார்ப்பு நிறைவடைந்ததும், WazirXஇல் உங்கள் கிரிப்டோ பயணத்தைத் தொடங்கலாம். 

வர்த்தகம் இனிதாக அமையட்டும்!

பொறுப்புத் துறப்பு: கிரிப்டோகரன்சி என்பது சட்டப்பூர்வ டெண்டர் அல்ல, தற்போது அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் போது, அதிக விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருப்பதால், நீங்கள் போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பிரிவில் வழங்கப்பட்ட தகவல்கள் எந்த முதலீட்டு ஆலோசனையையும் அல்லது WazirX இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இந்த வலைப்பதிவு இடுகையை எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் முன்னறிவிப்பின்றி திருத்தவோ அல்லது மாற்றவோ WazirX தனது சொந்த விருப்பத்தின் பேரில் உரிமை கொண்டுள்ளது.

Leave a Reply