Skip to main content

WazirXஇன் ‘கன்வெர்ட் கிரிப்டோ டஸ்ட்’ அம்சத்தை எப்படி பயன்படுத்துவது (How to use the WazirX ‘Convert Crypto Dust’ feature?)

By மே 11, 2022ஜூன் 20th, 20222 minute read
How to use the WazirX 'Convert Crypto Dust’ feature?

வணக்கம் சமூகத்தாரே!

உங்கள் கிரிப்டோ பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் WazirXஇல் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதில் உறுதியாக இருங்கள். மேலும், எங்கள் வழிகாட்டிகளைப் படித்த பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் எப்போதும் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம்.

WazirX வழிகாட்டிகள்

கிரிப்டோ டஸ்ட் என்றால் என்ன?

டஸ்ட் என்பது மிகக் குறைந்த மதிப்புகளைக் கொண்ட கிரிப்டோகரன்சி இருப்புகளைக் குறிக்கிறது. டஸ்ட் இருப்புகள் பொதுவாக மிகச்சிறிய அளவில் இருக்கும், அவை குறைந்தபட்ச திரும்பப் பெறும் அல்லது வர்த்தகத் தொகையை விட குறைவாகவும், சில சந்தர்ப்பங்களில், வர்த்தகக் கட்டணத்தை விடவும் குறைவாகவும் இருக்கும்.

WazirXஇல் தற்போது 250 டோக்கன்களுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளது. நீங்கள் ஏராளமான கிரிப்டோ சொத்துக்களை வர்த்தகம் செய்யும்போது, உங்கள் வேலட்டில் டஸ்ட் இருப்புகள் சேரும், அதை நீங்கள் திரும்ப எடுக்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ முடியாது. பல பயன்படுத்த முடியாத, சிறிய இருப்புகளை ஒரே பயன்படுத்தக்கூடிய டோக்கனாக மாற்றுவதன் மூலம், டஸ்ட் கன்வெர்ட் செயல்பாடு, பல பயன்படுத்த முடியாத இருப்புகளைக் கொண்டிருப்பதன் சிக்கலை தீர்க்கிறது. மீதமுள்ள கிரிப்டோ இருப்புகளை எங்களின் பயன்பாட்டு WRX டோக்கனாக மாற்ற, டஸ்ட் கன்வெர்ட் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்! பிறகு, WRX உடன், நீங்கள் வர்த்தகம் செய்யலாம், வர்த்தகக் கட்டணங்களைச் செலுத்தலாம், ஏர் டிராப்களில் பங்கேற்கலாம் மற்றும் WRX வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பல நன்மைகளைப் பெறலாம்! WazirX வெப், ஆண்டிராய்டு மற்றும் iOS பயன்பாடுகள் டஸ்ட் கன்வெர்ஷனை ஆதரிக்கின்றன!!

கிரிப்டோ டஸ்ட்டை WRX ஆக மாற்றுவது எப்படி?

மொபைல்: 

  1. கணக்கு அமைப்புகளுக்கு செல்லவும்
  2. கன்வெர்ட் கிரிப்டோ டஸ்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும்
Graphical user interface, application

Description automatically generated

3. நீங்கள் WRXக்கு மாற்ற விரும்பும் டஸ்ட் நிதிகளைத் தேர்ந்தெடுக்கவும்

4. மாற்று என்பதை கிளிக் செய்யவும்

Graphical user interface, application

Description automatically generated

5. உறுதி செய் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் மாற்றும் கோரிக்கையை உறுதிப்படுத்தவும்

வெப்:

  1. முகப்பு பக்கத்திலிருந்து நிதிகள் எனும் பகுதிக்கு செல்லவும்

2. WRXக்கு மாற்று என்பதை கிளிக் செய்யவும்

Graphical user interface, application

Description automatically generated

3. நீங்கள் WRXக்கு மாற்ற விரும்பும் டஸ்ட் நிதிகளைத் தேர்ந்தெடுக்கவும்

4. மாற்று என்பதை கிளிக் செய்யவும்

Graphical user interface, text, application, email

Description automatically generated

5. உறுதி செய் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் மாற்றும் கோரிக்கையை உறுதிப்படுத்தவும்

தயவு செய்து கவனிக்கவும்: ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒருமுறை 10 USDTக்குக் குறைவான மதிப்பில் இருக்கும் இருப்புகளை நீங்கள் WRX ஆக மாற்றலாம். பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாணயங்களை மாற்றுவது, தற்போதைக்கு சாத்தியமில்லை.

இந்த அம்சம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே உள்ள கமென்ட்ஸ் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

இனிமையான வர்த்தகம் அமையட்டும்!

Leave a Reply

WazirX Ad